பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விபரீதமான செயலில் ஈடுபட்ட காவலர்!
உத்திர பிரதேசத்தில், உதவி காவல் ஆய்வாளர் விஜய் பிரதாப்-க்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த காவலர் நடந்து கொண்ட விதம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் முதலில் பணியாற்றிய காவல் நிலையத்தில் இருந்து, புதிதாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு ஓடியே சென்றுள்ளார். 65 கி.மீ தூரம் ஓடியே சென்ற இவர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதுகுறித்து, விஜய பிரதாப் அவர்கள் கூறுகையில், உயரதிகாரிகள் சர்வாதிகார போக்கை சுட்டிக்காட்டும் வகையில் இவ்வாறு செயல்பட்டதாக கூறியுள்ளார்.