சபரிமலைக்கு மாலை போட்டுட்டு செய்ற காரியமா இது! சிம்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நடிகர் சிம்பு மாநாடு பட சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது சபரி மலைக்கு மாலை போட்டுள்ளார். இவர் மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத், சிம்புவுடன் இணைந்து இரவு உணவு சாப்பிட்டதாக, புகைப்படத்தை வெளியிட்டு டின்னர் டம் வித் சுவாமி என பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவுக்கு பலரும் நல்ல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து சிம்புவை திட்டி வருகின்றனர்.
அதில் ஒருவர், ஸ்டார் ஓட்டல்ல விரதம் இருக்கிறாரு, பாத்ரூம்ல டப்பிங் பேசுறாரு, சூட்டிங் பண்றத தவிர மாத்த எல்லாத்தையும் கரெக்ட்டா பன்றாரு இவரு, இன்னுமா இவங்கள எல்லாம் உலகம் நம்புது என கமெண்ட் செய்துள்ளார்.
Dinner time with swami#swamisaranam ???????? #STR pic.twitter.com/WUNnDuYZbk
— Mahat Raghavendra (@MahatOfficial) November 13, 2019