மது அருந்த பணம் கொடுக்கவில்லை! கணவன் செய்த கொடூரமான செயல்!
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே வசித்து வருபவர்கள் கணேசராஜ் – சிட்டு தம்பதியினர். இருவரும், தோட்டத்தில் பணி செய்து வந்துள்ளனர். டான்டீ குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில், சிட்டு உடலில் பலத்த தீக்காயங்களுடன், உயிருக்கு போராடி வந்துள்ளார்.
இதனையடுத்து, பக்கத்தில் இருப்பித்தவர்கள் அவரை மீட்டு, பந்தலூர் அரசு மருத்துவாமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில், நீதிபதி முன்னிலையில், வாக்குமூலம் கொடுத்த சிட்டு, ‘மது அருந்த என் கணவருக்கு பணம் கொடுக்க மறுத்ததால், அவர் என் மீது மண்ணெண்ணெய் ஊறி தீப்பற்ற வைத்தார். ‘ என கூறியுள்ளார். இந்நிலையில், சிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், போலீசார் கணேஷ் ராஜை கைது செய்துள்ளனர்.