எந்தவொரு செல்போன் சேவை நிறுவனமும் மூடப்படக் கூடாது – நிர்மலா சீதாராமன்
அண்மையில் உச்ச நீதிமன்றம் இந்தியாவில் தோலை தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் கோடி ரூபாய் தர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தோலை தொடபு நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதனிடையில், வோடபோன் நிறுவனம் கடும் நிதி சிக்கலில் இருப்பதாகவும், இதனால் தனது சேவையை நிறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து, இங்கிலாந்தை சேர்ந்த வோடாபோன் நிறுவன தலைவர் நிக் ரீட், ‘ இந்தியாவில் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழில் செய்வது சவாலான விஷயமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், இந்தியாவில் எந்தவொரு செல்போன் சேவை நிறுவனமும் மூடப்பட கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார்.