சிக்கலில் சிக்கிய விஜய் ரசிகர்கள்! என்ன நடந்தது தெரியுமா?
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் தீபாவளியை முன்னிட்டு, திரைக்கு வந்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம், பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படம் திரைக்கு வந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள், மதுரை மாவட்டம், மேலூர் அரசு பெண்கள் பள்ளியில், விஜய் ரசிகர்கள் அப்பள்ளியில் படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்பு கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மாணவர்களுக்கு பிகில் திரைப்பட ஸ்டிக்கர் வழங்கப்பட்டது. இந்த செயல் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி மீனாவதியிடம் கேட்ட போது, இந்த நிகழ்ச்சி குறித்து எந்த தகவலும் தனக்கு வரவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.