ஆட்டை விழுங்கிய 15 அடி மலைப்பாம்பு! அதிர்ச்சியில் உரிமையாளர்!
தேனீ மாவட்டம் கம்பம் அருகே, ஒட்டுக்குளம் பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் வழக்கம் போல் தந்து ஆடுகளை ஒட்டுக்குளம் பகுதியில் தனது ஆடுகளை மேய்ந்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது ஆடுகளில் ஒன்று குறைவதை அறிந்து, காணாமல் போன ஆட்டை தேடியுள்ளார். அவ்வாறு தேடிய போது, ஆட்டை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று ஒட்டுக்குளம் கரையோரத்தில் இருந்ததாகி பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் காவல்துறையினர் மற்றும் திணிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியோடு ஆட்டை விழுங்கிய 15 அடி மலைப்பாம்பை பிடித்து, அதனை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.