நீங்கள் கட்டியிருக்கிற வேஷ்டி கரை காங்கிரஸ் ஆக இருந்தாலும், மறக்காமல் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விடுங்கள்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும், மனுநீதி முகாம்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில் இவருக்கு பலரும் சால்வை போர்த்தி உள்ளனர்.
இவருக்கு அதிக அளவிலான சால்வை மற்றும் துண்டுகளை அணிவிப்பதால், ஒவொரு இடங்களிலும், 10 முதல் 15 நிமிடங்கள் வரை மக்களிடம் மனுக்களை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், தனக்கு சால்வை அணிவிக்க வந்தவர்களை தடுத்து, ‘இனிமேல் எனக்கு யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம். அதற்கு பதிலாக மனு எழுத முடியாமல் சிரமப்படும் இரண்டு பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுங்கள்.’ என கூறியுள்ளார்.
இந்நிலையில், முதியவர் ஒருவர் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிஅக்காரிகளுக்கு திருநீறு பூசிவிட்டு சென்றார். அவரை பார்த்து அமைச்சர் விஜயபாஸ்கர், ‘நீங்கள் கட்டியிருக்கிற வேஷ்டி கரை காங்கிரஸ் ஆக இருந்தாலும், மறக்காமல் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விடுங்கள்.’என கூறியுள்ளார். இதனால் அவரை சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025