பொன்னியின் செல்வனுக்காக வெறித்தனமாக தயாராகிறாரா அசுரன் சிவசாமி மூத்த மகன்!?
மணிரத்னத்தின் இயக்கத்தில் அடுத்து ப்ரமாண்டமாக தயாராகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், என முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தாய்லாந்து காடுகளில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் மணிரத்னம் படத்திற்கான லொகேஷன்களை பார்க்க தாய்லாந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அசுரன் படத்தில் தனுஷின் மூத்தமகனாக நடித்து இருந்த டி.ஜே அருணாச்சலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்து பெரிய ப்ரொஜெக்ட்டிற்க்காக உடலை வலுப்படுத்துகிறேன் என பதிவிட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையும் டேக் செய்திருந்தார். இதனால் பொன்னியின் செல்வன் படத்தில் இவரும் நடிக்கிறார் என தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.