முதல் டெஸ்ட்: 2-வது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை இழந்து பங்களாதேஷ் திணறல்..!

Default Image

முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங்  செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதில் முகமது ஷமி 3 விக்கெட்டை பறித்தார். பின்னர் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரராக களமிங்கிய மாயங்க் அகர்வால்  இரட்டைசதம் விளாசி  243 ரன்கள் குவித்தார்.இதை தொடர்ந்து  இறங்கிய புஜாரா ,ரஹானே , ஜடேஜா ஆகியோர் அரைசதம் விளாசினார்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 493 ரன்கள் எடுத்து இருந்தது.களத்தில் ஜடேஜா 60 ,உமேஷ் யாதவ் 25 ரன்களுடன் இருந்தனர்.இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய போது  இந்திய அணி கேப்டன் கோலி டிக்ளேர் அறிவித்தார்.பங்களாதேஷ் அணி வீரர் அபு ஜெயத் 4 விக்கெட்டை பறித்தார்.
இதை அடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சை  போல ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை பறிகொடுத்து திணறி வருகிறது. பங்களாதேஷ் 22 ஓவர் முடிவில் 60 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டை இழந்து உள்ளது.
இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும்  , முகமது ஷமி 2 விக்கெட்டையும் பறித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
tamil news live
School Leave
CSK - team
power outage 26.11.2025
Holiday for schools and colleges in Nagapattinam
rcb squad 2025