பேருந்து கட்டணத்தை குறைக்க கோரி எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டம்…!!

Default Image

பேருந்து கட்டண உயர்வினை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் உட்பட பல அரசியல்வாதிகளும் போராட்டங்களை நடத்தினர். அதன் பின், கட்டணத்தை சிறிதளவில் தமிழக அரசு குறைத்து, அது இன்று முதல் அமலுக்கும் வந்ததது.
ஆனால், கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி இன்று சென்னை கொளத்தூரில் அத்தொகுதி எம்எல்ஏ ஆன திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன. சாலையில் சுமார் 6 அரசுப் பேருந்துகளை மறித்து அதன் மீது ஏறி நின்று திமுகவினர் முழக்கமிட்டனர். அதனை அடுத்து போலீசார் ஸ்டாலின் உட்பட அனைவரையும் கைது செய்துள்ளனர். அதே போல் சிந்தாரிப்பேட்டை பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன. இந்தப் போராட்டத்தில் வைகோ, திருமாளவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்