நிலத்தடி நீரைப் பாதுகாக்க ரூ.6,000 கோடி செலவில் திட்டம் போடும் மத்திய அரசு…!!
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட 8 மாநிலங்களில் நிலத்தடி நீரின் அளவானது குறைந்து வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்க சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை மத்திய பிஜேபி அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் நிலத்தடி நீர்மட்ட அளவு வெகுவாக குறைந்து வரும் 78 மாவட்டங்களில் நிலத்தடி நீரை அளவினை பாதுகாக்க முயற்சி எடுக்கப்படும். இந்த திட்டத்தை உலக வங்கி உதவியுடன் 5 ஆண்டுகளில் செயல்படுத்த, மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலுக்காக திட்டவரைவானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நிலத்தடி நீர் மீது சட்டரீதியாக மத்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அகவே மத்திய அரசு இந்த விவாகரத்தில் நேரடியாக தலையீடு செய்ய முடியாது என்பதால், மேலே குறிப்பிட்ட அந்த 11 மாநில அரசுகளுக்கு 50 சதவீத நிதியை ஒதுக்கி இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.