மேயர் பதவி போட்டி ! தலைமை முடிவு செய்தால் போட்டி- உதயநிதி ஸ்டாலின்
தலைமை முடிவு செய்தால் தான் மேயருக்கு போட்டியிட முடியும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்து வருகிறது.தற்போது வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது.இதனால் கட்சிகள் அனைத்தும் விருப்பமனுக்களை விநியோகம் செய்து வருகின்றது.
சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்தார்.இந்த நிலையில் இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறுகையில், தலைமை கூறினால் நிற்பேன்.தலைமை முடிவு செய்தால் தான் மேயருக்கு போட்டியிட முடியும்.நான் இது குறித்து முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.