திக் திக் சம்பவம்..! 180 பயணிகளுடன் புல்வெளியில் தரையிறங்கிய விமானம்..!

Default Image

ஏ 320 ஜெட் விமானம் திங்களன்று நாக்பூரிலிருந்து 180 பேருடன் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.அதே நாளில் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கடும் மூடுபனி  காரணமாக ஓடுபாதையில் இருந்து விமானம் விலகி ஓடுபாதை அருகில் இருந்த புல்வெளியில் மீது தரையிறங்கியது.
180 பயணிகளுடன் புல்வெளியில் டேக்-ஆஃப் ஆன இந்திய Flight- பதறவைக்கும் ‘திக் திக்’ சம்பவம்!
பின்னர் விமானம் வேகமாக இயக்கி மீண்டும் பறந்தது.இதை தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது.இது குறித்து கோ ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , இதற்கு அசம்பாவிதத்திற்கு  காரணம் கடுமையான மூடுபனி.இதனால் ஓடுபாதை தெரியவில்லை என கூறினார்.
மேலும் 180 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும்,  விமானத்தின் விமானியை இடைநீக்கம் செய்து உள்ளதாகவும் கூறினர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்