விஷாலின் புதிய படத்திற்கு திடீர் பெயர் மாற்றம் – காரணம் இது தானாம்!
இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் சுரதா ஸ்ரீநாத் நடித்துள்ளனர். இவர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு இரும்புத்திரை 2 என பெயரிடுவதாக கூறப்பட்டது.
ஆனால், அந்த படத்திற்கு தற்போது சக்ரா என பெயரிட்டு அந்த படத்தின் பெஸ்ட் லக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த பெயரிட காரணம் இரும்புத்திரை முதல் படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தனது பட பெயரின் இரண்டாம் பாகம் வேறொரு இயக்குனரால் உருவாக்கப்படுவதை ஒப்புக்காவூலகத்து தான் என கூறப்படுகிறது.