வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன் – கமல்ஹாசன்

வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து ஓன்று பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.அதாவது தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் கூறுகையில்,தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன். ஊராட்சிக்கும், மாநகராட்சிக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.