முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி நிதானமான ஆட்டம்..!
இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இன்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் , இம்ருல் கயஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் 6 ரன்னுடன் வெளியேறினர்.
இதை தொடர்ந்து பின்னர் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். இறுதியாக பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் மோமினுல் ஹக் 37 , முஷ்பிகுர் ரஹீம் 43 ரன்கள் எடுத்தனர்.
இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் ,ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆனால் ரோஹித் வெளியேறினார்.பின்னர் புஜாரா களமிறங்க இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இறுதியாக இன்றைய ஆட்டமுடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்து உள்ளது.களத்தில் புஜாரா 43 , மாயங்க் அகர்வால் 37 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.