மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டி ! திமுக அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல்
மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தி.நகர் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு விருப்பமனு தாக்கல் செய்தார்.