டெல்லியில் பிச்சை எடுத்த சிறுமிக்கு பாலியல் தூண்டல் செய்த 60 வயது முதியவர் கைது..!

டெல்லியின் கொனாட் பிளேஸ் பகுதியில் ஆறு வயது சிறுமி பிச்சை எடுத்து கொண்டு இருந்தார். அவரை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் தூண்டலில் ஈடுபட்டதாக கூறி அவரை அங்கு இருந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையினரும், மக்களும் விசாரித்தனர் அப்போது அவர் சிறுமி “பசியுடன்” இருந்ததால் அவருக்கு ரூ.10 கொடுத்ததாகவும், பின்னர் முத்தமிட்டதாகவும் கூறினார்.அந்த சிறுமி பார்த்தற்கு தனது மகளைப்போல இருப்பதால் தான் அவரை முத்தமிட்டதாக கூறினார்.
மற்றபடி அவரை எந்தவிதமான தூண்டுதலுக்கும் ஈடுபடுத்தவில்லை என கூறினார். ஆனால் அந்தப் சிறுமியின் தனிப்பட்ட பாகங்களைத் தொடுவதைக் பார்த்தாக ஒரு வழிப்போக்கன் கூறினார்.
அந்த வழிப்போக்கன் கூறுகையில் ,நானும் எனது நண்பர்களும் கொனாட் பிளேஸ் மெட்ரோ ஸ்டேஷன் வழியாக செல்லும்போது அவரைப் பார்த்தேன். அவர் அந்த சிறுமியை பலவந்தமாக முத்தமிட்டு அவரது தனிப்பட்ட பகுதியைத் தொட்டுக் கொண்டிருந்தார்.
சிறுமி அவள் அழுது கொண்டிருந்தாள், அப்போது சிறுமி “பயா பச்சலோ” ( அண்ணன் காப்பாத்துகள் ) என சொன்னபோது எனது மனம் உடைந்து விட்டதாக கூறினார். அவளுடைய கண்ணீரையும் , அவளுடைய அப்பாவி கண்களையும் என்னால் மறக்க முடியாது. எனவும் கூறினார்.