தென்கொரியாவில் சிவப்பாக மாறிய இம்ஜின் ஆறு! காரணம் என்ன தெரியுமா?
ஆப்பிரிக்கா நாட்டில், பன்றிக் காய்ச்சல் பர வந்துள்ளது. இதனை தடுப்பதற்காக தென் கோரிய அதிகாரிகள் 47 ஆயிரம் பன்றிகளை தேர்ந்தெடுத்து கொன்றுள்ளனர். இதனையடுத்து, இந்த பன்றிகள் கொல்லப்பட்ட பகுதியில் மழை பெய்துள்ளது.
இதனால், இம்ஜின் ஆற்றின் ஒரு கிளை நதியில் இந்த பன்றிகளின் ரத்தம் கலந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் விலங்குகளிடம் வேகமாக பரவக்கூடிய, குணப்படுத்த முடியாத நோயாகும். இந்த நோய் தாக்கிய பன்றிகளில் எதுவும் உயிர் தப்புவதில்லை.ஆனால், இந்த நோயினால் மனிதனுக்கு எந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.
இந்நிலையில், ஆற்றில் கலந்துள்ள ரத்தம் பிற விலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட காரணமாக அமையும் என்று கவலைகள் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தப் பன்றிகள் நோய் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டன என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.