ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ! முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இருந்து விடுவித்து  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரபேல் விவகாரம் நாடு முழுவதும் சூடு பிடித்து வந்தது.அந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.அப்பொழுது ,ரபேல் விவகாரத்தில் நீதிமன்றமே காவலாளியே திருடன் என்று கூறியதாக கூறி பிரதமர் மோடியை  விமர்சித்தார் ராகுல் காந்தி.இந்த பேச்சு பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இதன் மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.இதனைதொடர்ந்து இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது.அதன்படி உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பில்,ராகுல் காந்தியை விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளது.மேலும் வழக்கினை முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளது.நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும்போது எதிர்காலத்தில் எச்சரிக்கை தேவை என்று ராகுல் காந்திக்கு அறிவுறுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.