INDvsBAN: டாஸ் வென்ற பங்களாதேஷ்..! இந்திய அணி பந்து வீச்சு ..!
இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இன்று முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து உள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன் ), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றனர்.
பங்களாதேஷ் அணி வீரர்கள்:
இம்ருல் கயஸ், ஷாட்மேன் இஸ்லாம், முகமது மிதுன், மோமினுல் ஹக் (கேப்டன்), முஷ்பிகூர் ரஹீம், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர் ), மெஹெடி ஹசன், தைஜுல் இஸ்லாம், அபு ஜெயத், எபாதத் ஹொசைன் ஆகியோர் இடம்பெற்றனர்.