இன்று முதல் டெஸ்ட்போட்டி..! சாதனையை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் இந்திய அணி .!
இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இன்று இந்த இரண்டு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.
இப்போட்டி இந்தூரில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி காலை 09.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11 முறை டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று உள்ளது.
பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்த சாதனையை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்க உள்ளது.