இந்த செல்போன கண்டுபிடிச்சவன மிதிக்கனும் -அதிமுக அமைச்சர் ஆதங்கம்
செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், தமிழக கதர்துறை அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.அதனால், மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்ற செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.