உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும் முன்னே விருப்பமனு ? காரணத்தை விளக்கிய முதலமைச்சர்
உள்ளாட்சித் தேர்தலில் அதிகம் பேர் போட்டியிடுவார்கள் என்பதால் முன்கூட்டியே விருப்பமனு வழங்கப்பட்டது என்று
நவம்பர் 15, 16-ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில்,உள்ளாட்சித் தேர்தலில் அதிகம் பேர் போட்டியிடுவார்கள் என்பதால் முன்கூட்டியே விருப்பமனு வழங்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு தான் .கால அவகாசம் குறைவு என்பதால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்கூட்டியே விருப்ப மனு பெறப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.