பரமக்குடி நெசவாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு! பிரதமர் மோடி – ஷி ஜின்பிங் சாதிப்பிற்க்கான சூப்பரான நினைவு பரிசு!
அக்டோபர் 11 , 12 தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி தமிழக பரமபரிய முறை படி வேஷ்டி சட்டை அணிந்திருந்தார்.
இதனை குறிப்பிடும் வகையில் பரமக்குடி நெசவாளர்கள் பிரதமர் மோடி வேட்டி சட்டையுடன் சீன அதிபரை சந்தித்த புகைப்படத்தை நூல் சேலையில் 3டியில் இருவரது உருவமும் தெரியும் வண்ணம் நெய்யப்பட்டுள்ளது. இந்த சேலையை நேராக பார்த்தல் இருவரது உருவமும் தெரியும். அதே சேலையை பக்கவாட்டில் இருந்து பார்த்தால் மாமல்லபுர சிற்பங்கள் தெரியும். இந்த முறை பட்டு சேலைகளில் ஏற்கனவே இருக்கிறது என்றாலும், காட்டன் சேலைகளில் இவ்வாறு 3டியில் உருவம் பொறிக்கப்பட்டது இதுவே முதல் முறை என கூறுகிறார்கள்.