சிறையிலிருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்
வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.அதாவது தந்தையின் உடல்நலம்,அக்கா மகள் திருமணம் உள்ளிட்ட காரணங்களால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்கள் பரோல் வாங்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.