மயக்கமடைந்த தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் விஷயவாயு தாக்கி உயிரிழப்பு!
சென்னை ஐஸ் ஹவுசில் ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்கள் அமர்த்தப்பட்டார்கள். அப்போது ராயப்பேட்டையை சேர்ந்த இளைஞனும் அவரது தம்பி மேலும் சிலர் வேலை செய்து வந்ததனர். அப்போது, அந்த இளைஞனின் தம்பி திடீரென விஷவாயுவால் மயக்கமடைந்தார்.
உடேன தம்பியை காப்பாற்ற கழிவுநீர் தொட்டியில் இறங்கினர். பின் தம்பியை காப்பாற்றி விட்டார் ஆனால் துரதிஷ்டவசமாக அண்ணன் விஷவாயு தாக்கி உயிரிழந்துவிட்டார். தம்பி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில் உரிய உபகரணங்கள் இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்கள் ஈடுபட்டதே இதற்க்கு கரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.