அயோத்தியில் ராமர் கோவில் எப்போது கட்டிமுடிக்கப்படும்?! தற்போது வரை என்ன வேலைகள் நடைபெற்றுள்ளன?!
அயோத்தியில் சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் எனவும் அதில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சன்னி வக்ஃபு முஸ்லீம் அமைப்புக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட ஏற்பாடுகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் கொடுத்த வரைபடத்தின் படி ராமர் கோவில் கட்டமைக்கப்பட்ட உள்ளது. கட்டப்படும் கோவிலின் உயரம் 128 அடியாகும்.
கோவிலுக்கான தூண்கள் தயாரிக்கும் பனி 1990களிலேயே ஆரம்பிக்கப்பட்டது. தூண்கள் அமைக்கும் பணி 60 சதவீதம் முடிந்துள்ளதாகவும், ராமர் கோவிலை கட்டுவதற்கு 212 தூண்கள் தேவைப்படும் எனவும், இதுவரை 106 தூண்கள் தயாராகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணி அடுத்த வருட ஏப்ரலில் தொடங்கி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நடைபெறும் என கூறப்பட்டுவருகிறது.