இன்றைய போட்டியில் கோப்பையை கைப்பற்றப்போவது யார் ..?எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ..!
இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையே மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இரவு 07 மணிக்கு தொடங்க உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர்.இதில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளனர்.இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றபோது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் இப்போட்டியில் ரிஷாப் பண்ட்டின் சில தவறுகள் ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.எனவே அவர் அந்த தவறுகளை இன்றைய போட்டியில் செய்யமாட்டார் என நம்பப்படுகிறது.கலீல் அகமது ரன்களை வாரி வழங்கியதால் இப்போட்டியில் இவர் மாற்ற வாய்ப்பு உள்ளது.