தமிழக அரசினை திருடன் என்று விமர்சித்த கமல் ஹாசன்…??
டாஸ்மாக் வியாபாரம் செய்யும் தமிழக அரசை திருடன் என்றும், “மது வியாபாரம் செய்வதற்கு அரசு என்று ஒன்று தேவையில்லை” என்றும் தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இடையே கமல்ஹாசன் பேசியுள்ளார். மேலும் தரமான கல்வி, குடிநீர் வசதி செய்து தருவதே அரசின் கடமைகள். சாதியாலும் மதத்தாலும் பிரிவினை ஏற்படுத்துவது தவறு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “சமூக மாற்றத்தை மாணவர்களால் தான் கொண்டு வரமுடியும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். நம் தெருவை சுத்தமாக பார்த்து கொண்டாலே நாடு சுத்தமாகும். குழந்தைகளை எந்தவித கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக செயல்பட விடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர், “தலைவர்கள் தேவையில்லை; மாணவர்களே தலைவர்களாக செயல்பட வேண்டும். சரியாக பணியாற்றாத பிரதிநிதிகளை மக்கள் தூக்கி எறியுங்கள். விழிப்புணர்வோடு இருங்கள்” என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.