ஒரு மணி நேரத்திற்குள் 2 முறை பேட்டியளித்த ரஜினிகாந்த்! பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்திரன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ,’ திருவள்ளுவருக்கு காவி பூசுவது போல எனக்கும் சிலர் காவி வண்ணம் பூசப்பார்க்கிறார்கள். நானும் திருவள்ளுவரும் காவி சாயத்திற்குள் சிக்கமாட்டோம். திருவள்ளுவருக்கு காவி பூசுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் . ‘ என தன் மீது கூறப்பட்டுவரும் அரசியல் சர்ச்சைகளுக்கு பதிலளித்தார்.
அவரது இந்த பேச்சு தமிழகம் மட்டுமல்லாதாலு இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. பல அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர். இவரது கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. அந்த அரசியல் தடாலடி பேச்சின் தாக்கம் அடங்குவதற்குள் அடுத்த பேட்டியை தனது வெற்றிக்கு சென்றவுடன் கொடுத்தார்.
அவர் வீட்டில் பத்திரிக்கையளர்களிடம் பேசுகையில், ‘என் மீது பாஜக சாயம் பூச ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. நான் வெளிப்படையாக தான் பேசிவருகின்றேன். அரசியல் கட்சி தொடங்கும் வரை நான் திரைப்படங்களில் நடிப்பேன். தமிழக அரசியலில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மைதான். ‘ என தனது கருத்துக்களை மீண்டும் பதிவு செய்தார்.
தமிழக அரசியல் வெற்றிடம் பற்றி அவர் கூறிய கருத்து தமிழக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பினர் பற்றியும் எதிர்ப்பை சந்தித்தது. இவரது அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்கள் தான் இன்றைய அரசியல் களத்தில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025