வாடிக்கையாளர்களை ஆச்சிரியப்படுத்திய வாட்ஸ் அப்.. புதுப்புது அப்டேட்கள் இதோ..!
வாட்ஸ் ஆப் பயனாளிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த பின்கர் ப்ரின்ட் அன்லாக் அப்டேட், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் பின்கர் ப்ரின்ட் மூலம் அன்லாக் செய்யலாம். மேலும், ஐ-போன் பயனாளிகள், தங்களின் பேஸ் லாக் மூலம் பயன்படுத்த முடியும்.
எப்படி இதனை செயல்படுத்த முடியும்?
உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள். அதில் பிரைவசி (privacy)யை தேர்வு செய்யுங்கள். பின்னர் பின்கர் ப்ரின்ட் லாக் என்ற வசதி இருக்கும். அதில் அன்லாக் வித் பின்கர் ப்ரின்ட் (Unlock with fingerprint) என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களின் விரல் ரேகையை உங்கள் மொபைலில் உள்ள பின்கர் ப்ரின்ட் ஸ்கேனரில் பதிவு செய்து உபயோகிக்கலாம். இந்த அப்டேட், பின்கர் ப்ரின்ட் ஸ்கேனர் இருக்கும் அனைத்து போனிகளிலும் வந்துள்ளது.
இதுமட்டுமின்றி, மற்றொரு அப்டேட்டையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டது. அதில், நாம் பதிவேற்றும் ஸ்டேட்டஸ்களை நம் பேஸ்புக் பக்கத்திழும் ஷேர் செய்யலாம். தற்பொழுது பேஸ்புக் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமிலும் அதனை பகிரலாம்.
இந்த அப்டேட், அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களிழும் வெளிவந்துள்ளது. மேலும், ஐ-போன் பயனாளிகள் உபயோகிக்கு ஐஓஎஸ் (IOS) செயலிகளிலும் இந்த அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும், டார்க் மோட் பயன்பாட்டை குறித்து வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்தது.