தேசிய கீத பாடலுக்கு எழுந்து நிற்காத பெண்கள்,இளைஞர்களால் பரபரப்பு ..!

Default Image

பெங்களூரில் அக்டோபர் 23-ம் தேதி பி.வி.ஆர் ஓரியன் மாலில் உள்ள  ஒரு திரையரங்கில் “அசுரன்” திரைப்படத்தின் போது  2 பெண்கள் , 2 இளைஞர் தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காத அவர்களிடம் நாட்டுக்காக  52 வினாடிகளை எழுந்து நிற்க முடியவில்லையா..?ஆனால் இங்கே உட்கார்ந்து மூன்று மணி நேர திரைப்படத்தைப் பார்க்க உங்களால் முடிகிறது. என ஒரு பெண் கேட்டு உள்ளார். மேலும்  “நீங்கள் பாகிஸ்தான் பயங்கரவாதியா?” என கேட்டார்.


அந்த வீடியோவை கன்னட நடிகர்கள் அருண் கவுடா, பி.வி. ஐஸ்வர்யா பகிர்ந்து உள்ளனர். “தேசிய கீதம் வந்தபோது, ​​இவர்கள் நிற்கவில்லை. இவர்களைப் பாருங்கள். அவர்களின் முகங்களை மீண்டும் ஒரு முறை பாருங்கள் அருண் கவுடா கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யா எழுந்து நிற்க முடியாவிட்டால் திரையரங்கில் இருந்து வெளியேறும்படி கூறினார். “எங்கள் வீரர்கள் காஷ்மீரில் எங்களுக்காக போராடுகிறார்கள், நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள் என கூறினார்.  தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காத நபர்களின் விவரங்களைக் கேட்டு  பி.வி.ஆர் மாலுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்