போராட்டத்தை தவிர்க்க சொன்ன ஸ்டாலின் ! நன்றி தெரிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
எனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மிசா சட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.இதனால் திமுகவினர் அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.
எனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் என்று திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையினில் இது குறித்து தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், எனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி. ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.