போலீசார் சபரிமலைக்கு செல்வதாக இருந்தால் விடுப்பில் செல்ல வேண்டும் ..! அதிரடி உத்தரவு..!
ஐயப்பன் சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் இருந்து செய்வார்கள். ஆனால் காவல்துறையினர் சீருடை அணியாமல் விருதத்திற்காக தாடி ,மீசை வளர்த்து கொள்ளுவதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும்.
இதற்காக அந்தந்த காவல் நிலைய காவல்துறை ஆணையர் மற்றும் டி.ஐ.ஜி யிடம் அனுமதி பெறவேண்டும்.இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராட்சகொண்டா காவல்துறை ஆணையாளர் மகேஷ் பகவத்திற்கு சபரிமலைக்கு செல்ல இருப்பதால் சீருடை அணியாமல் விருதத்திற்காக தாடி ,மீசை வளர்த்து கொள்ளுவதற்கு அனுமதி கேட்டு பல விண்ணப்பம் வந்து உள்ளது.
இதை தொடர்ந்து மகேஷ் பகவத் நேற்று முன்தினம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அதில்”சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் போலீசார் இரண்டு மாதம் விடுமுறை எடுத்து செல்லலாம். அப்படி பணியில் இருந்தால் சீருடை , ஷு கண்டிப்பாக அணியவேண்டும்.
மேலும் அதிக மீசை ,தாடி வளர்த்து கொண்டு இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.இந்த சுற்றறிக்கை மாலை அணிந்து செல்லும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.