இன்றைய (08.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் உங்கள் சாதகமான நாளாக இருக்காது. எதோ இல்லாதது போன்ற உணர்வு ஊன்களிடத்தில் இருக்கும். இன்று உங்களுக்கு பொறுமை மிக அவசியம்.
ரிஷபம் : வாய்ப்ப்புகள் அதிகாமாக கிடைக்கும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். முக்கிய முடிவுகளை இன்றே எடுத்துவிடுங்கள். இன்று நீங்கள் கொண்டாடும் சூழல் உண்டாகும்.
மிதுனம் : உங்களது கடின உழைபிற்கான பலன் இன்று கிடைக்கும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். நல்ல பலனுள்ள நாள்.
கடகம் : நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் மிகவும் ஆழமாக செயல்படாமல் யதார்த்தமாக செயல்படுங்கள். புதிய இடங்களுக்கு செல்லுங்கள் மனம் அமைதியாக இருக்கும். இன்று உங்களுக்கு அமைதியான அணுகுமுறை முக்கிய தேவை.
சிம்மம் :பிறருக்கு உதவி செய்யுங்கள். முக்கியமாக இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் மனம் அமையதியாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்காமல் இருப்பது நல்லது.
கன்னி : உங்கள் முயற்சி இன்று வெற்றியில் முடியும். அந்த வெற்றிகள் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். இன்று உங்கள் மனம் சமநிலையை நாடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
துலாம் : இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுடையது, அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ளுங்கள். அனைத்தும் உங்களுக்கு ஏற்றார்போல நடைபெறும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் செய்யும் செயலுக்கு அளவான பலன்களே கிட்டும். யதார்த்தமான அணுகுமுறைகளை மேற்கொள்ளுங்கள். உங்களின் விடாமுயற்சி நல்ல பலனை தரும்.
தனுசு : வாழ்வில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள் இன்று இல்லை. கவனமாக செயல்படுங்கள். இன்று உணர்ச்சிவசப்பட வேண்டிய சூழல் வரும் அதனை கட்டுப்படுத்தி இருங்கள்.
மகரம் : இன்று நீங்கள் அமைதியான அணுகுமுறைகளை செயல்படுத்தினால் நல்ல முடிவுகள் கிடைக்கும். உங்கள் முக்கியமான வேலைகளை செய்துவிடுங்கள் இன்றைய நாள் உங்களுடையது.
கும்பம் : சீரான நாள் இன்று. மகிழ்ச்சியும் திருப்தியும் ஒரு சேர காணப்படும் நாள். இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதனை உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீனம் : இன்றைய நாள் சுமூகமாக இருக்க நீங்கள் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். நம்பிக்கையை இழக்கும் நிலைமை ஏற்படும். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.