பாஜக-வில் இணைந்த பிரபல நடிகை!
கடந்த சில காலமாக பாஜகவில் திரைப்பட நடிகை, நடிகர்கள் இணைவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி, மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம் 23, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஜெயலட்சுமி, பொன் இராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளாராம். இதுகுறித்து, பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி, இன்று தன்னை தமிழக பாஜகவில் இணைத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜாகாவில் இணைத்துக் கொள்ள காரணம்.’ என பதிவிட்டுள்ளார்.