என்ன ஒரு புத்திசாலித்தனம்! காரை மறித்து காரின் மேல் ஏறி உட்கார்ந்த யானை! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
நாம் எப்போதுமே வனவிலங்குகள் இருக்கும் பகுதியில் வாகனங்களை ஓட்டி செல்வது மிகவும் தவறு. ஏன்னென்றால் வனவிலங்குகள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். எனவே எப்போதுமே வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் காரை ஓட்டி செல்வதை தவிர்ப்பது நல்லது.
தாய்லாந்து தேசிய பூங்காவின் வழியாக சென்றுக் கொண்டிருந்த காரை, யானை ஒன்று வழிமறித்து, காரின் மேல் ஏறி அமர்ந்துள்ளது. கார் சற்றும் நகர முடியாத வண்ணம் காரில் ஏறி அமர்ந்துள்ளது. முதலில் யானை காரின் முன் பக்கத்தை தட்டியுள்ளது. அப்படியே அப்படியே தனது இரண்டு முன்னங்கால்களை எடுத்து காரை மிதித்து, காரை அப்படியே அமுக்க முயன்றுள்ளது.
இந்நிலையில், இந்த யானை சற்று கவன குறைவாக இருந்த வெளியில், ஓட்டுநர் அங்கிருந்து காரை வேகமாக எடுத்து தப்பித்து ஓடியுள்ளார். யானை, முழுவீச்சுடன் செயல்பட்டிருந்தால், காருடன் சேர்ந்து காரில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.