லக்னோ:8 அடி உயரம் உள்ள ஆப்கானிஸ்தான் ரசிகருக்கு ரூம் கொடுக்க மறுத்த ஊழியர்கள் ..!

Default Image

வெஸ்ட் இண்டீஸ் அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் இந்தியாவில் 3 டி 20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். நேற்று முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் போட்டியை பார்க்க நேற்று முன்தினம்  இந்திய வந்து உள்ளார்.அந்த ரசிகர் தங்குவதற்கு ஹோட்டகளுக்கு அறை தேடி சென்று உள்ளார்.

அப்போது அந்த ரசிகரின் உயரத்தை பார்த்த ஒரு ஹோட்டல் ஊழியர் அறை வழங்க மறுத்து உள்ளனர். இதனால் பல ஹோட்டகளுக்கு அறை தேடி சென்று உள்ளார். அந்த ரசிகரின் உயரம் 8 அடி இரண்டு அங்குலம் அதனால் அவருக்கு யாரும் அறை கொடுக்கவில்லை. பின்னர் கடைசியாக அவர் காவல் நிலையத்திற்கு சென்று  தனக்கு நடந்ததை கூறி உள்ளார்.
Image result for Lucknow: An 8-foot-tall Afghan fan refused to give a room
இதை தொடர்ந்து காவல் துறை அந்த ரசிகரை நாகா ஹிண்டோலா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைத்து உள்ளனர்.பிறகு போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.இவரின்உயரம் அங்கு காட்டு தீ போல பரவ அவரைப்பார்க்க பலர் அந்த ஹோட்டலுக்கு சென்று உள்ளனர்.
நேற்று மட்டும் 200 பேர் அவரை பார்க்க வந்து உள்ளனர்.இதனால் அவரை போலீசார் பாதுகாப்புடன் நேற்று போட்டியை காண அழைத்து சென்றனர்.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்