குழந்தைகள் தினத்தன்று இந்த நேரத்தில் செல்போன் உபயோகப்படுத்தக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கைபேசி அடிமைகளாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கைபேசியுடன் செலவிடும் நேரத்தை இன்று குடும்பத்துடன் செலவிடுவதில்லை.
இந்நிலையில், நவ.14 குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் அனைவரும் இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை தங்கள் செல்போனை அணைத்து வைத்துவிட்டு, குழந்தைகளுடன் நேரத்தை செலவளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவழிக்க வேண்டும். 1 மணி நேரம் மின்னணு பொருட்களை தவிர்ப்பது குழந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என அறிவுறுத்தியுள்ளனர்.