பஞ்சமி நில விவகாரம் ! தமிழக அரசுக்கு நோட்டீஸ்
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளது என்ற புகாரில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளது என பேராசிரியர் சீனிவாசன் புகார் மனு அளித்தார்.இந்த நிலையில் சீனிவாசன் மனு மீது தேசிய தாழ்த்தபட்டோர் நல ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 19-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழக அரசின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது தேசிய தாழ்த்தபட்டோர் நல ஆணையம்.