புயலுக்கு யார் பெயர் வைக்குறாங்க ? அட இவுங்கதாங்க
கடந்த 2004-ஆம் ஆண்டு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் அமைந்திருக்கும் 8 நாடுகளின் கூட்டு முயற்சியில் WMO (World Meteorological Organization)/ ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், தாய்லாந்து மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது.
இந்த 8 நாடுகளும் ஏற்கனவே 64 (8 x 8) பெயர்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்கும் . ஒவ்வொரு நாட்டின் பரிந்துரையை அடுத்து சுழற்சி முறையில் புயல்களுக்கு பெயர் வைப்பது வழக்கம்.