வரலாற்றை மாற்றி எழுதிய வங்கதேச அணி பறிபோன இந்தியாவின் சாதனை

Default Image

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது .டெல்லியில் கற்று மாசுபாடு பிரச்னையால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது ,இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.காற்று மாசுபாட்டின் காரணமாக மைதானத்தை சுற்றி வண்டியின் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது .
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர் .யாரும் எதிர்பாராத நிலையில் ரோஹித் ஷர்மா 9 ரன்னில் வெளியேறினார் .
பின்னர் கே.எல் ராகுல் 15, ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.நிதானமாக விளையாடிய தவான் 41 ரன்கள் அடித்து அரைசதம் அடிக்காமல் வெளியேறினார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது.பங்களாதேஷ் அணிசார் பில் ஷபியுல் இஸ்லாம் ,அமினுல் இஸ்லாம் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
பங்களாதேஷ் அணி149 ரன்கள் இலக்கை துரத்தியது. இதில் லிட்டன் தாஸ் 7 ரன்களும், முஹம்மது நம் 26 ரன்களுடன், சௌமிய சர்கர் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருந்தனர். இதில், முஸ்தாபிர் ரகுமான் 43 பந்துகளில் அதிரடியாக விளையாடி 60 ரன்களை கடந்து ஆட்டமிழ்க்காமல் இருந்தார்.பங்களாதேஸ் அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 19.3 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி வெற்றியின் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. அதாவது இதற்கு முன்னர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே நடைபெற்ற 8 போட்டியில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது.இந்நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இந்தியாவின் தொடர் வெற்றியை முறியடித்துள்ளது.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்