இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் வள்ளுவம் -ஹெச்.ராஜா ட்வீட்
இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் வள்ளுவம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்ஷம் என்கிறது. அதன் அடிப்படையிலேயே அறம்,பொருள்,இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். ஆகவே வள்ளுவமானது வடிவமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில். pic.twitter.com/pfsCsRc28k
— H Raja (@HRajaBJP) November 3, 2019
இந்த நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்ஷம் என்கிறது.அதன் அடிப்படையிலேயே அறம்,பொருள்,இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். ஆகவே வள்ளுவமானது வடிவமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் என்றுபதிவிட்டுள்ளார்.