36 வருடங்களுக்கு பிறகு தாயை கண்டுபிடித்த மகள்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ராஸ் கைமாஹ் பகுதியை சேர்ந்த பெண் மரியம். இவருடைய மிக சிறிய வயதிலேயே அவரது அம்மாவும், அப்பாவும் விவாகரத்து செய்துள்ளனர். இதனையடுத்து, அப்பாவிடம் மரியத்தை விட்டுவிட்டு, அவரது தாயார் இந்தியா சென்று விட்டார். இவர் இந்தியாவிற்கு செல்லும் போது 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
தனது தந்தையுடம், தாயுடன் நினைவுகளுடன் வாழ்ந்த இவர், தனது தாயை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வாழ்ந்துள்ளார். எப்படியாவது தாயை, கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்த இவரது வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக இவரது தந்தை இறந்து விட்டார்.
இதனையடுத்து, மரியம் தனது தாயை தேடும் பணியை தீவிரப்படுத்திய இவர், எவ்வாறு இவ்வளவு பெரிய நாடான இந்தியாவில் தாயை எவ்வாறு தேடுவது என்று யோசித்த இவர், பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதன் விளைவாக அவர் தனது தாயாரை கண்டுபிடித்துள்ளார். தாயாரை பார்த்த போது அவருக்கு காத்திருந்த இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், தனது சகோதரியையும் பார்த்துள்ளார். சகோதரியை பார்த்த இவர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.
36 வருடங்களுக்கு பின் தனது தயை கண்டுபிடித்த மரியம், இந்தியாவில் எந்த இடத்தில கண்டுபிடித்தார் என்பது பற்றி கூறப்படவில்லை.