அடிக்கடி செல்போன் பயன்படுத்துறீங்களா? இந்த நோய் வரும் எச்சரிக்கை! அதற்க்கு அறிகுறி இதுதான்!
இன்றைய சமீகத்தில் நாகரீகம் என்கின்ற பெயரில் தங்களுக்கு தாங்களே, ஆரோக்கியக்கேடுகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். இன்று குழந்தைகள் முதல் முதுமை அடைந்தவர்கள் வரை அனைவருமே தொலைபேசி அல்லது கணினியை உபயோகப்படுத்துகிறோம்.
இவற்றை நாம் பயன்படுத்தும் போது, கண் சிமிட்டுவதை மறந்து விடுகிறோம். இதனால் கண்ணில் ஈரப்பதம் சுரக்காமல், உலர் கண் நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வின்படி, இந்த நோயினால் 21 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 2030-ஆம் ஆண்டில் 275 மில்லியன் மக்கள் உலர் கண் நோயினால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அறிகுறிகள்
கணினி, நவீன தொடுதிரை தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டிகள், அலங்கார வண்ண விளக்குகள் போன்றவற்றை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.
முறையாக கண் சிமிட்டாமல், நமது கண்ணில் உள்ள ஈரப்பதம் குறையும் போது இந்த நோய் ஏற்படுகிறது. மேலும் காற்றில் பறக்கும் மண், தூசுகள் போன்றவை கண்ணில் படுவதாலும், அதிக நேரம் கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.
மருத்துவ ஆலோசனை
கண்கள் உறுத்துதல், கண்களில் அரிப்பு, எரிச்சல், கண்களில் நீர்வடிதல், மங்களன் பாறை போன்ற அறிகுறிகள் ஏற்படும் போது, உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
கணினி மற்றும் செல்போன் உபயோகிப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். அடிக்கடி கண்களை சிமிட்டினாலே இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும். மேலும், ஒமேகா -3 அதிகமுள்ள உணவுகளை உண்பது அவசியம்.