படேல் யாருக்கு இரும்பு மனிதர்?

Default Image

1948 ஜனவரி 20ல் காந்தியைக் கொலை செய்வதென திட்டமிடுகிறார்கள். அந்த திட்டப்படி அன்று காந்தி அந்த முயற்சியிலிருந்து தப்பித்து விடுகிறார்.
பாபா மதன்லால் என்ற கோட்சேவின் கூட்டாளி மாட்டிக் கொள்கிறான்; “இந்தக் கொலை முயற்சியில் நாங்கள் 7 பேர் ஈடுபட்டோம்” என்று அவன் வாக்கு மூலம் கொடுக்கிறான்.

அவன் கொடுத்த வாக்கு மூலத்தில் கோட்சேவின் பெயரும் இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் கோட்சேவின் போட்டோ உள்பட அவன் ஜாதகமே போலீஸ் கையில் இருக்கிறது. காந்திக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் படவில்லை.கோட்சேவை சல்லடை போட்டு தேடுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.தேசத்தந்தையென்று கொண்டாடப்படுகின்ற ஒருவர் கொலை முயற்சியிலிருந்து தப்பித்திருக்கிறார் என்றால் அவருக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பை அரசு வழங்கியிருக்க வேண்டும்? செய்யப்பட்டதா?

அடுத்த பத்தாவது நாளில் சர்வ சாதாரணமாக கோட்சே பிரார்த்தனை மண்டபத்திற்குள் நுழைந்து காந்தியைச் சுட்டுக் கொல்கிறான்.
1948 ஜனவரி 30ல் காந்தி கோட்சேவால் சுட்டுகொல்லப் படுகிறார்.
அன்று மத்திய அரசின் உள்துறை மந்திரியாக இருந்தவர் சர்தார்வல்லபாய்_படேல். தேசத் தந்தையைக் காப்பாற்ற முடியாதவர் இரும்பு மனிதரா? அல்லது இந்துத்வா மனிதரா?
இந்துத்துவா மனிதராக இருந்ததால்தான் ஆசியாவிலேயே பெரிய்ய்ய்ய சிலையை அரசு செலவில் அமைக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது அல்லவா?
-மதுரைபாலன் அவர்களது முகநூல் பக்கத்திலிருந்து

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்