அருள்தரும் பழனி முருகன் தண்டாயுதபாணி சன்னதியின் தனி பெரும் சிறப்புகள்!

Default Image

முருகனின் அறுபடை  வீடுகளில் முக்கியமான புண்ணியஸ்தலம் பழநி.  முருகனை பழம் நீ என அழைத்து  பின்னர் அது பழநீ ஆகி தற்போது பழநி என அழைக்கப்பட்டு வருகிறது. ஞானப்பழம் கிடைக்காமல் முருகன் தன் பெற்றோர்களிடத்து கோபித்துக்கொண்டு ஆண்டியாக பழநியில் காட்சிதருகிறார் என நம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். இருந்தும் பழநி தண்டாயுதபாணி திருத்தலத்தை பற்றி இன்னும் சில தகவல்களை நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்.

பழநியில் முருகனுக்கு கோவில் ,இருப்பது போல முருகனை சமாதானபடுத்த வந்த தாய் பார்வதி பெரியனாகிய எழுந்தருளியுள்ள ஒரு கோவில் இங்குள்ளது. அதே போல இங்கிருந்து 5கிமீ தொலைவில் தந்தை சிவன் தன் பிள்ளையை சமதப்படுத்த வந்து, பெரியாவுடையராக ஒரு கோவிலில் அருள்பாலித்து வருகிறார்.

பழனியில் உள்ள தண்டாயுதபாணி (முருகன் ) சிலையை போகர் சித்தர் நவ பாஷாணங்களால் உருவாக்கியுள்ளார். முருகர் சிலைக்கு தினமும் இரவு தூய சந்தனம். நிவேதனமாகதேன் கலந்த தினைமாவும் சாத்தப்படுவது வழக்கம். இந்த பொருட்கள் சாது சாமிகள் மடத்திலிருந்து தினமும் வந்து சேர்க்கிறது.

இதே கோவிலில் போகருக்கு சிலை உள்ளது. அவர் பூஜை செய்து வாங்கிய புவனேஸ்வரி தேவியும், மரகத லிங்க சிலையும் இன்னும் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கின்றனர்.  போகரின் சீடர்களான புலிப்பாணிக்கு தனி சன்னதி உளது. மேலும் பழநி மலையை காவடியாக தூக்கி வந்த இடம்பாக்கனுக்கு தனி கோவில் இங்குள்ள்ளது.
பழநியில் அருள்தரும் பாலதண்டாயுதபாணி , காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருகிறார். இரு கோலத்திலும் அவரை தரிசித்தால் மிகுந்த நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்