ரூ.99 க்கு ஆப்பிள் டிவி – திணறடிக்க வரும் மிகப்பெரிய ஆஃபர்
ஆப்பிள் டிவி பிளஸ் சேவை ரூ.99 -க்கு அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை அதிகரித்து வருகிறது.குறிப்பாக இந்த துறையில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) ,ஹாட் ஸ்டார் (Hot Star) போன்ற நிறுவனங்கள் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனங்களை போலவே ஆப்பிள் நிறுவனமும் தனது புதிய ஸ்ட்ரீமிங் சேவையான ஆப்பிள் டிவி பிளஸ்-ஐ உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது.
ஆனால் இந்தியாவில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவிற்கு இந்த சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஆப்பிள் டிவி பிளஸ் சேவை.இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஆரம்ப விலையோ ரூ.99 மட்டுமே. முதல் 7 நாட்கள் இந்த சேவை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் இந்த சேவை புதிதாக ஆப்பிள் ஐபோன், ஐபேட் வாங்கும் பயனர்களுக்கு முதல் ஆண்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த சேவையைப் பயன்படுத்த ஆப்பிள் சாதனங்களை மட்டுமே வைத்திருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களின் வெப் பிரவுசரை கொண்டே ஆப்பிள் டி.வி பிளஸ்-ஐ காண முடியும்.
ஆப்பிள் டி.வி பிளஸ்-இன் இந்த குறைந்த விலையிலான சேவை ,அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) ,ஹாட் ஸ்டார் (Hot Star) போன்ற நிறுவனங்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.