ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து கமல்…??
கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கும் பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று செய்துயாளர்களை சந்தித்த இவரிடம், ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், ‘ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை. மக்கள் நலன்தான் முக்கியம்’ என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் விஜயேந்திரர் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது, சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது, செய்துதான் காட்ட முடியும். தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை, எழுந்து நிற்பது எனது கடமை” என்று கூறியுள்ளார்